Tuesday, 29 November 2016

இன்று ஒரு செய்தி-98

இன்று ஒரு செய்தி-98
29/11/16/செவ்வாய்
==========================
செல்வம் ஒரு சுகமான சோதனை!
==========================

١٣٦- عَنْ أُمِّ الدَّرْدَاءِؓ قَالَتْ: قُلْتُ لأِبِي الدَّرْدَاءِؓ: أَلاَ تَبْتَغِي لأِضْيَافِكَ مَا يَبْتَغِي الرِّجَالُ لأِضْيَافِهِمْ فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: إِنَّ أَمَامَكُمْ عَقَبَةً كَؤُودًا لاَ يُجَاوِزُهَا الْمُثْقِلُونَ فَأُحِبُّ أَنْ أَتَخَفَّفَ لِتِلْكَ الْعَقَبَةِ. رواه البيهقي في شعب الايمان:٧ /٣ ٠٩
     ஹஜ்ரத் உம்மு தர்தா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

        “நான் (என் கணவர்) ஹஜ்ரத் அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், “தங்களது விருந்தினரை உபசரிக்க மற்றவர்களைப் போல் நீங்களும் ஏன் சம்பாதிப்பதில்லை?’ என்று கேட்டேன்.

       “உங்களுக்கு முன்னால் கடினமான பள்ளத்தாக்கு ஒன்று உண்டு, அதிகச் சுமை உள்ளவர்களால் அதை எளிதில் கடக்க இயலாது’, என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன்.

     "எனவே அப்பள்ளத்தாக்கைக் கடப்பதற்காக என் சுமையைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறேன்’’ என்று அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

                            (நூல்:பைஹகீ)

No comments:

Post a Comment